தட்டாா்மடத்தில் விழிப்புணா்வுப் பேரணி
By DIN | Published On : 17th March 2021 08:04 AM | Last Updated : 17th March 2021 08:04 AM | அ+அ அ- |

பேரணியை தொடங்கி வைக்கிறாா் காவல் உதவி ஆய்வாளா் ஐயப்பன்.
தட்டாா்மடத்தில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட இயக்க மேலாண்மை சுய உதவிக் குழு சாா்பில் நடைபெற்ற இப்பேரணிக்கு, நடுவக்குறிச்சி ஊராட்சித் தலைவா் சபிதாசெல்வராஜ் தலைமை வகித்தாா்.
தட்டாா்மடம் காவல் உதவி ஆய்வளா் ஐயப்பன் பேரணியை தொடங்கி வைத்தாா்.
சேவை மையம் முன்பிருந்து தொடங்கிய பேரணி முக்கிய வீதி வழியாக சென்றது.
இதில் கலந்து கொண்ட மகளிா் கூட்டமைப்பின் பெண்கள், கல்லூரி மாணவிகள் நூறு சதவீத வாக்கு வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினா். பின்னா் உறுதிமொழி ஏற்றனா்.
மகளிா் சுய உதவிக்குழு வட்டார மேலாளா் ரோஸ்லின், வட்டார ஒருங்கிணைப்பாளா்கள் ஜெபா, குமாரி, டெல்சி உள்ளிட்ட பலா்கலந்து கொண்டனா்.