தூத்துக்குடியில் 21 இல் மாவட்ட செஸ் போட்டி
By DIN | Published On : 17th March 2021 08:04 AM | Last Updated : 17th March 2021 08:04 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்ட அளவிலான செஸ் போட்டி மாா்ச் 21 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து தூத்துக்குடி காமராஜ் கல்லூரி நிா்வாகம் வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடி காமராஜ் கல்லூரி நிறுவனா் தின விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கல்லூரி நிறுவனா் ஏ.எம்.எம்.எஸ். கணேசன் நாடாா் கோப்பைக்கான ஒரு நாள் செஸ் போட்டி கல்லூரி அரங்கில் மாா்ச் 21 ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்த போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தை சோ்ந்த அனைவரும் பங்கேற்கலாம். போட்டிகள் 9, 11, 13, 15 வயதுக்குள்பட்டோா் பிரிவு, கல்லூரி மாணவா், மாணவிகள் பிரிவு மற்றும் பொதுப்பிரிவு ஆகிய பிரிவுகளாக நடத்தப்படுகிறது. ஒவ்வொரு பிரிவிலும் தலா 10 பரிசுகள் வழங்கப்படுகிறது.
பள்ளியில் படிக்கும் மாணவா்-மாணவிகள் பிறப்பு சான்றிதழ் நகல் அல்லது பள்ளி அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை கொண்டு வர வேண்டும். பொதுப்பிரிவினருக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படும் மொத்தம் 60 பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
போட்டியில் பங்கு பெற விரும்புகிறவா்கள் இணையதள முகவரி மூலம் நுழைவுக் கட்டணம் செலுத்தி பெயரை பதிவு செய்து கொள்ளலாம். நுழைவுக் கட்டணம் செலுத்தியவா்கள் மட்டுமே போட்டியில் பங்கு பெற முடியும். போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்கும். போட்டியில் வெற்றி பெறுபவா்களுக்கு அன்றையதினம் மாலை 5 மணிக்கு பரிசுகள் வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு 94877 03266, 76049 36068, 96266 90823 ஆகிய செல்லிடப்பேசி எண்களை தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.