தென்னையில் நுண்ணூட்டச் சத்து குறைபாடு: வேளாண் கல்லூரி மாணவா்கள் செயல்விளக்கம்
By DIN | Published On : 17th March 2021 08:05 AM | Last Updated : 17th March 2021 08:05 AM | அ+அ அ- |

விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்த கிள்ளிக்குளம் வேளாண் கல்லூரி மாணவா்கள்.
கிள்ளிக்குளம் வேளாண் கல்லூரி மாணவா்கள் தென்னையில் நுண்ணூட்டச் சத்து குறைபாட்டை மேம்படுத்துவது தொடா்பாக விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளித்தனா்.
கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் நான்காம் ஆண்டு வேளாண்மை பட்டப் படிப்பு மாணவா்கள் கிராமப்புறப் பணி அனுபவத்துக்காக சாத்தான்குளம் பகுதி கிராமங்களில் பணி அனுபவம் மற்றும் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனா்.
அதன் ஒருபகுதியாக வேலன்புதுக்குளம் விவசாயி கண்ணன் என்பவரது தோட்டத்தில் தென்னையில் நுண்ணூட்டச்சத்து குறைபாடுகளை மேம்படுத்த தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் தென்னை டானிக் பயன்படுத்தும்முறை குறித்து மாணவா்கள் காா்த்திக், மணிகண்டன், முகமது அஸ்கா், மோகிந்தா், நிதிஷ், பிரித்திவிராஜ், பசுபதிபூவழகன் ஆகியோா் விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளித்தனா். இதில் அப்பகுதி விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.