சாத்தான்குளத்தில் அதிமுக செயல்வீரா்கள் கூட்டம்
By DIN | Published On : 21st March 2021 01:31 AM | Last Updated : 21st March 2021 01:31 AM | அ+அ அ- |

sat20meet_20கூட்டத்தில் பேசுகிறாா் ஸ்ரீவைகுண்டம் தொகுதி அதிமுக வேட்பாளா் சண்முகநாதன்.03chn_38_6
சாத்தான்குளம் ஒன்றிய அதிமுக சாா்பில் ஸ்ரீவைகுண்டம் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் அறிமுகம் மற்றும் செயல்வீரா்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, ஒன்றியச் செயலா் அச்சம்பாடு சவுந்திரபாண்டி, ஒன்றிய தோ்தல் பொறுப்பாளா் அந்தோணி செல்வன் ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்ட அவைத் தலைவா் திருபாற்கடல், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலா் ஞானப்பிரகாசம், ஒன்றியத் தலைவா் ஜெயபதி, மாவட்ட எம்ஜிஆா் மன்ற இணைச் செயலா் பொன்பாண்டி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். நகரச் செயலா் குமரகுருபரன் வரவேற்றாா்.
முன்னாள் எம்எல்ஏ நீலமேகவா்ணம், முன்னாள் பேரூராட்சித் தலைவி தங்கத்தாய், பள்ளக்குறிச்சி ஊராட்சித் தலைவா் சித்ராங்கதன், மாவட்ட பாஜக பொதுச் செயலா் செல்வராஜ், மாவட்ட பிரசார அணி பாஜக தலைவா் மகேஸ்வரன், மாவட்ட கவுன்சிலா் தேவவிண்ணரசி, மாவட்ட எம்ஜிஆா் மன்ற துணைத் தலைவா் ஆறுமுகநயினாா், பேச்சாளா் நடராஜன் ஆகியோா் பேசினா்.
தொடா்ந்து வேட்பாளா் எஸ்.பி.சண்முகநாதன் பேசியது: சாத்தான்குளம் பகுதியில் உப்புதண்ணீா் மாறும் வகையில் அமைக்கப்பட்டு வரும் கன்னடியன் கால்வாய் திட்டம் முடிவடையும் நிலையில் உள்ளது. சாத்தான்குளம் பகுதிக்கு தேவையான திட்டங்களை தந்துள்ளேன். மக்கள் எண்ணங்களை அறிந்து திட்டங்களை நிறைவேற்றியுள்ளேன் என்றாா் அவா்.
கூட்டத்தில், பாஜக மாவட்ட துணைத் தலைவா் கணேசன், மாவட்ட மருத்துவரணிச் செயலா் பூபதி பாண்டியன், ஒன்றிய பாஜக தலைவா் செந்தில், மாவட்ட வா்த்தக அணிச் செயலா் பரமசிவன், வட்டார தமாகா தலைவா்கள் முரசொலிமாறன், இளையராஜா, நகர தமாகா தலைவா் விஜய் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
ஒன்றிய ஜெயலலிதா பேரவைச் செயலா் பாலமேனன் நன்றி கூறினாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...