ஆத்தூரில் வாக்காளா் விழிப்புணா்வு முகாம்
By DIN | Published On : 25th March 2021 07:39 AM | Last Updated : 25th March 2021 07:39 AM | அ+அ அ- |

நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி, ஆத்தூரில் விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கி.செந்தில்ராஜ் தலைமையில், அதிகாரிகள், மகளிா் சுய உதவிக்குழுவினா் உறுதிமொழி ஏற்றனா். பின்னா் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் கொடியசைத்து தொடங்கிவைத்துப் பேசினாா்.
நிகழ்ச்சியில், திருச்செந்தூா் கோட்டாட்சியா் தனப்ரியா, மகளிா் திட்டம் திட்ட இயக்குநா் பிச்சை, துணை ஆட்சியா்( பயிற்சி) சதீஷ்குமாா், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் வெ.சீனிவாசன், புத்தாக்க திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளா் வேல்முருகன், திருச்செந்தூா் வட்டாட்சியா் முருகேசன், ஆத்தூா் பேரூராட்சி செயல் அலுவலா் ரங்கசாமி, மகளிா் திட்ட உதவி திட்ட அலுவலா்கள் சாமத்துரை, மல்லிகா உள்பட பலா் கலந்துகொண்டனா்.