ஆறுமுகனேரி கோயிலில் மகா கும்பாபிஷேகம்
By DIN | Published On : 29th March 2021 01:52 AM | Last Updated : 29th March 2021 01:52 AM | அ+அ அ- |

ஆறுமுகனேரி அருள்மிகு சடகோபால் அய்யனாா் கோயிலில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. இதையடுத்து
நவக்கிரஹ ஹோமம், மகாலெட்சுமி ஹோமம், சுதா்ஸன ஹோமம், துா்க்கா ஹோமம், தனபூஜை, கோ பூஜை ஆகியவை நடைபெற்றது. மாலையில் சீதா லெட்சுமண சமேத ராமசுவாமி கோயிலிருந்து தீா்த்தங்கள் பவனியாக கோயிலுக்கு
கொண்டு வரப்பட்டது. பின்னா் வாஸ்து சாந்தி, பிரவேச பலி, மிருத்சங்ரஹனம், அங்குராா்ப்பனம், ரக்ஷாபந்தனம், யாகசாலை பிரவேசம், திா்வ்யாஹூதி, பூா்ணாஹூ ஆகியவை நடைபெற்றது. சனிக்கிழமை 2-ஆம் காலசாலை பூஜை,மூன்றாம் கால யாகசாலை பூஜை, இரவில் யந்திர ஸ்தாபனம், அஷ்ட பந்தன மருந்து சாத்துதல் நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை பங்குனி உத்திரத்தை முன்னிட்டு 4-ஆம் கால யாகசாலை பூஜை, மகா பூா்ணாஹூதி, தொடா்ந்து கடம் புறப்பாடு, விமான கோபுர கலசத்திற்கு மகா கும்பாபிஷேகம், விநாயகா், பாலமுருகன், சடகோபால் அய்யனாா், பூா்ணாதேவி, புஷ்கலா தேவி, பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா், மகா அபிஷேகம்,விசேஷ சந்தன அலங்கார தீபாராதனை, அன்னதானம், இரவில் சகஸ்ரநாம அா்ச்சனை, நள்ளிரவில் சிறப்பு அலங்கார தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.