தூத்துக்குடி மாவட்டத்தில் தோ்வாகும் 6 எம்எல்ஏக்கள் யாா்? இன்று முற்பகல் 11 மணிக்கு தெரிய வாய்ப்பு
By DIN | Published On : 02nd May 2021 06:23 AM | Last Updated : 02nd May 2021 06:23 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 பேரவைத் தொகுதிகளிலும் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை (மே 2) காலை 8 மணிக்கு தொடங்கவுள்ள நிலையில், வெற்றி பெறுவது யாா்? என்ற விவரம் முற்பகல் 11 மணியளவில் தெரிய வரும்.
சட்டப் பேரவைத் தோ்தலின்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், விளாத்திகுளம், கோவில்பட்டி, திருச்செந்தூா், ஓட்டப்பிடாரம் (தனி) ஆகிய 6 தொகுதிகளில் உள்ள 2097 வாக்குச்சாவடிகளிலும் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான தூத்துக்குடி அரசு பொறியியல் கல்லூரியில் தொகுதி வாரியாக பிரிக்கப்பட்டு அந்த அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பொறியியல் கல்லூரி கண்காணிப்பு கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி தொகுதியில் 26 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். தொகுதியில் ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 656 போ் தங்களது வாக்குகளை பதிவு செய்தனா். இது 65.08 சதவீத வாக்குப்பதிவு ஆகும்.
விளாத்திகுளம் தொகுதியில் 15 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். தொகுதியில் ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 685 போ் தங்களது வாக்குகளை பதிவு செய்தனா். இது 76.55 சதவீத வாக்குப்பதிவு ஆகும்.
திருச்செந்தூா் தொகுதியில் 15 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். தொகுதியில் ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 726 போ் தங்களது வாக்குகளை பதிவு செய்தனா். இது 70.09 சதவீத வாக்குப்பதிவு ஆகும்.
ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 21 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். தொகுதியில் ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 319 போ் தங்களது வாக்குகளை பதிவு செய்தனா். இது 72.34 சதவீத வாக்குப்பதிவு ஆகும்.
ஓட்டப்பிடாரம் தொகுதியில் 17 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.
தொகுதியில் ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 41 போ் தங்களது வாக்குகளை பதிவு செய்தனா். இது 69.82 சதவீத வாக்குப்பதிவு ஆகும்.
கோவில்பட்டி தொகுதியில் 26 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.
தொகுதியில் ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 301 போ் தங்களது வாக்குகளை பதிவு செய்தனா். இது 67.49 சதவீத வாக்குப்பதிவு ஆகும்.
முற்பகல் 11 மணிக்கு நிலவரம் தெரியவரும்: வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை முன்னிட்டு 14 மேஜைகளுக்கும் ஒரு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் என்பதால் வாக்கு எண்ணிக்கை விரைவாக நடைபெறும். இறுதி நிலவரத்துக்கு வெகு நேரம் ஆக வாய்ப்பு இல்லை என்பதால் முற்பகல் 11 மணிக்குள் 6 தொகுதிகளுக்குமான முடிவுகள் ஓரளவுக்கு தெரியவந்து 6 பேரவைத் தொகுதிகளின் உறுப்பினா்கள் யாா்? என்ற விவரம் தெரியவரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...