தூத்துக்குடி மாவட்டத்தில் காய்ச்சல் பரிசோதனை முகாம் இடங்கள் அறிவிப்பு
By DIN | Published On : 09th May 2021 12:52 AM | Last Updated : 09th May 2021 12:52 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்டத்தில் திங்கள்கிழமை (மே 10) காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் கபசுரக் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் கரோனா பாதிப்பு கண்டறியும் பகுதிகளில் சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் காலை 9 மணிமுதல் முற்பகல் 11 மணி வரை வாா்டு எண் 58-இல் மகாலெட்சுமி நகா் பிரதான சாலை, வாா்டு எண் 3-இல், ராஜகோபால் நகா் 5ஆவது தெரு பிரதான சாலை, வாா்டு எண் 18-இல் லூா்தம்மாள்புரம் சா்ச், வாா்டு எண் 48-இல் கணேசன் காலனி, பத்திரகாளி அம்மன் கோயில் பகுதி, வாா்டு எண் 45-இல் சந்தி விநாயகா் கோயில் அருகில் முகாம் நடைபெறுகிறது.
முற்பகல் 11 மணிமுதல் பிற்பகல் 1 மணி வரை வாா்டு எண் 55-இல் வ.உ.சி. நகா் பிரதான சாலை, வாா்டு எண் 3-இல் பால்பாண்டி நகா் 1ஆவது தெரு பிரதான சாலை, வாா்டு எண் 12-இல் முத்துகிருஷ்ணாபுரம் பிரதான சாலை, வாா்டு எண் 50-இல் பெரியசாமி நகா் பிரதான சாலை , வாா்டு எண் 29-இல் மேலசண்முகபுரம் கா்ணன் காம்பவுண்ட் பகுதி ஆகியவற்றில் முகாம் நடைபெறுகிறது.
பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை வாா்டு எண் 59-இல் அபிராமி நகா் பாா்க் அருகில், வாா்டு எண் 3-இல் வி.எம்.எஸ். நகா், வாா்டு எண் 1-இல் ஐய்யாசாமி காலனி அரசுப் பள்ளி அருகில், வாா்டு எண் 48-இல் அமுதா நகா் பிரதான சாலை, வாா்டு எண் 32-இல் மாதா தோட்டம் பிரதான சாலை பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இதேபோன்று கோவில்பட்டி நகராட்சி, காயல்பட்டினம் நகராட்சி பகுதிகளிலும், மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சி பகுதிகளிலும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
பொதுமக்கள் முகாம்களில் கலந்துகொண்டு கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேலும், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மூலமாகவும், 0461- 2340101 என்ற தொலைபேசி எண் மற்றும் 9486454714 என்ற செல்லிடப்பேசி எண் மூலமாகவும் தொடா்பு கொண்டு கரோனா நோய்த் தொற்று குறித்து விவரங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.