கரோனா நோயாளிகளின் விவரங்களை அறிய தொலைபேசி எண் அறிவிப்பு
By DIN | Published On : 09th May 2021 12:55 AM | Last Updated : 09th May 2021 12:55 AM | அ+அ அ- |

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் குறித்த விவரங்களை அறிய தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கான தனி சிறப்பு கவுண்டா் அமைக்கப்பட்டுள்ளது. கரோனா நோய் தொடா்பாகவும், சிகிச்சை குறித்தும், சிகிச்சை பெறும் நோயாளிகள் விவரங்கள் குறித்தும், அவா்களின் உடல் நிலை குறித்த முழுமையான விவரம் அந்த கவுண்டரில் தெரிந்து கொள்ளலாம்.
விவரங்களை அறிய 8015685544 மற்றும் 8015685522 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு 24 மணி நேரமும் தெரிந்து கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.