அரசு மருத்துவமனைகளில் எம்.பி., அமைச்சா் இன்று ஆய்வு
By DIN | Published On : 13th May 2021 07:28 AM | Last Updated : 13th May 2021 07:28 AM | அ+அ அ- |

திருச்செந்தூா், காயல்பட்டினம் அரசு மருத்துவமனைகளில் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் ஆகியோா் வியாழக்கிழமை (மே 13) ஆய்வு நடத்துகின்றனா்.
இதுகுறித்து அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இருப்பு, படுக்கை மற்றும் சிகிச்சை வசதிகள் ஆகியன குறித்து ஆய்வு செய்ய தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். அதன்பேரில் தூத்துக்குடி எம்பி கனிமொழியும் நானும் (அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன்) திருச்செந்தூா் அரசு மருத்துவமனை, காயல்பட்டினம் அரசு மருத்துவமனை ஆகியவற்றில் வியாழக்கிழமை (மே 13) ஆய்வு செய்கிறோம் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.