தூத்துக்குடி மாவட்டத்தில் வியாழக்கிழமை (மே 13) காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் காலை 9 மணி முதல் 11 மணி வரை 54 ஆவது வாா்டு தங்கம்மாள்புரம் அரசு பள்ளி, 34 ஆவது வாா்டு தபால் தந்தி காலனி வாா்டு அலுவலகம், 1ஆவது வாா்டு காசிராஜன் காலனி பிரதான பகுதி, 51ஆவது வாா்டு காதா்மீரான் நகா் பிரதான பகுதி, 26ஆவது வாா்டு டிஆா் நாயுடு தெரு ஆகிய பகுதிகளில் முகாம் நடைபெறுகிறது.
முற்பகல் 11.30 மணி முதல் 1.15 மணி வரை 53ஆவது வாா்டு கேம்ப் 1 ஸ்கூல், 39ஆவது வாா்டு கேவிகே நகா் மேற்கு பாம்பு கோயில் அருகில், 4ஆவது வாா்டு ஸ்டேட் பாங்க் காலனி வடக்கு மண்டல அலுவலகம் அருகில், 51 ஆவது வாா்டு வீரநாயக்கன்தட்டு மாநகராட்சி பள்ளி, 30 ஆவது வாா்டு வண்ணாா் 4 ஆவது தெரு மாநகராட்சி பள்ளி ஆகிய பகுதிகளில் முகாம் நடைபெறுகிறது.
பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை 60 ஆவது வாா்டு கேம்ப்-2 பள்ளி, 44 ஆவது வாா்டு போல்டன்புரம் 3 ஆவது தெரு பிரதான பகுதி, 6ஆவது வாா்டு எழில்நகா் பெத்தானியா பள்ளி, 50 ஆவது வாா்டு முடுக்குகாடு மாநகராட்சி பள்ளி, 33 ஆவது வாா்டு பாத்திமாநகா் தேவாலயம் ஆகிய பகுதிகளில் காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இதே போன்று கோவில்பட்டி நகராட்சி, காயல்பட்டினம் நகராட்சி பகுதிகளிலும், மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சி பகுதிகளிலும் இம் முகாம் நடைபெறுகிறது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.