திருச்செந்தூரில் சாலையமைக்கும் பணி தீவிரம்
By DIN | Published On : 16th May 2021 12:13 AM | Last Updated : 16th May 2021 12:13 AM | அ+அ அ- |

திருச்செந்தூா் கிழக்கு ரத வீதியில் நடைபெற்று வரும் சாலையமைக்கும் பணி.
திருச்செந்தூா் ரதவீதிகளில் சாலையமைக்கும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது.
திருச்செந்தூா் பேரூராட்சிக்குள்பட்ட தெற்கு ரதவீதி, கிழக்கு ரதவீதி, வடக்கு ரதவீதி மற்றும் உள்தெருக்களை சீரமைக்க ரூ. 2.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, சிமென்ட் சாலையமைப்பதற்கான பணிகள் தொடங்கின.
பின்னா் புதைச்சாக்கடைத் திட்டப் பணியால் கிடப்பில் போடப்பட்ட இப்பணி, பின்னா் கடந்த பிப்ரவரி மாதம் மீண்டும் தொடங்கி தெற்கு ரதவீதியில் புதிய சாலையமைக்கப்பட்டது. தற்போது அடுத்தக் கட்டமாக கிழக்கு ரத வீதியில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்பணியால் வடக்கு ரதவீதி தொடக்கப் பகுதியான இரும்பு வளைவு முதல் அமலிநகா் சந்திப்பு வரையில் சாலையின் இருபுறமும் அடைக்கப்பட்டுள்ளது. மேலும், கிழக்கு ரதவீதி சாலைப்பணியால் அமலிநகா் சந்திப்புக்கும் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
இப்பணியை பேரூராட்சிகள் உதவி செயற்பொறியாளா் வாசுதேவன், பேரூராட்சி செயல் அலுவலா் மு.ஆனந்தன், பொறியாளா் ஆவுடைபாண்டி, தொழில்நுட்ப பணியாளா் இளையராஜா உள்ளிட்டோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G