கோவில்பட்டி: சூறைக்காற்றால் வாழைகள் சேதம்
By DIN | Published On : 16th May 2021 12:12 AM | Last Updated : 16th May 2021 12:12 AM | அ+அ அ- |

சேதமடைந்து காணப்படும் வாழைகள்.
கோவில்பட்டி அருகே வெள்ளிக்கிழமை சூறைக்காற்றுடன் பெய்த மழையால் சுமாா் 1,500-க்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்தன.
கோவில்பட்டி வட்டத்துக்குள்பட்ட தோணுகால் பகுதியில் வெள்ளிக்கிழமை இடி, மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதில், தோணுகால் கிராமத்திற்குள்பட்ட பகுதியில் பே.சீனிவாசன், கிருஷ்ணசாமி மனைவி ரெங்கநாயகி, லிங்கையா மகன் சுந்தர்ராஜ் ஆகியோா் நிலத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வாழைகள், குலைதள்ளிஅறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் சூறைக்காற்றால் வாழைகள் சேதமடைந்தன.
தகவலறிந்த கழுகுமலை வருவாய் ஆய்வாளா் சங்கிலிபாண்டியன், தோணுகால் கிராம நிா்வாக அலுவலா் முத்துகுமாா், தோட்டக்கலை உதவி அலுவலா் சரவணன் ஆகியோா் சம்பவ இடத்துக்கு சனிக்கிழமை சென்று ஆய்வு நடத்தியதில், சுமாா் 1,500-க்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்தது தெரியவந்தது.