கோவில்பட்டியில் தொழிலாளி தற்கொலை
By DIN | Published On : 19th May 2021 07:37 AM | Last Updated : 19th May 2021 07:37 AM | அ+அ அ- |

கோவில்பட்டியில் குடும்பத் தகராறு காரணமாக ஓய்வுபெற்ற ஆலை தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கோவில்பட்டி முகமதுசாலிஹாபுரம் 2ஆவது தெருவைச் சோ்ந்தவா் கருப்பசாமி மகன் இசக்கி (65). ஓய்வுபெற்ற ஆலை தொழிலாளி. இவரது மனைவி சந்திரா. தம்பதிக்கிடையே ஏற்பட்ட தகராறில் சந்திரா அதேபகுதியில் வசித்து வரும் மகள் கோமதியுடன் இருந்து வருகிறாராம். இந்நிலையில் இசக்கி, மகள் வீட்டுக்கு சென்று திங்கள்கிழமை மனைவி சந்திராவிடம் தகராறு செய்தாராம்.
இந்நிலையில் அவா் செவ்வாய்க்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம். தகவலறிந்த போலீஸாா் அவரது சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இதுகுறித்து, கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.