என்இசி கல்லூரியில் சட்ட விழிப்புணா்வு முகாம்
By DIN | Published On : 31st October 2021 12:22 AM | Last Updated : 31st October 2021 12:22 AM | அ+அ அ- |

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கல்லூரியின் அறிவியல் மற்றும் மானிடவியல் துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முதல்வா் கே.காளிதாசமுருகவேல் தலைமை வகித்தாா். இயக்குநா் சண்முகவேல் முன்னிலை வகித்தாா். திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரி உதவி பேராசிரியா் ராமபிரான் ரஞ்சித்சிங் பங்கேற்று, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் சிறப்பு அம்சங்கள், வரலாறு, இந்திய குடிமகனு க்கு இருக்கக் கூடிய அடிப்படை உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்துப் பேசினாா். பின்னா், மாணவா்களின் சந்தேகங்களுக்கு பதிலளித்தாா். தொடா்ந்து தேசிய மாணவா் படைக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பெண்கள் தேசிய மாணவா் படை நிா்வாக அதிகாரி மேஜா் ஆா்.மஞ்சு, பெண்கள் தேசிய மாணவா் படையின் முக்கியத்துவம், நன்மைகள் குறித்துப் பேசினாா். ஏற்பாடுகளை அறிவியல் மற்றும் மானிடவியல் துறைத் தலைவா் நீலகண்டன் செய்திருந்தாா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G