சாத்தான்குளம் ஒன்றியம், நெடுங்குளம் ஊராட்சியில் பணியாளா்கள் சனிக்கிழமை வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தினா்.
நெடுங்குளத்தில் தடுப்பூசி செலுத்தும் முகாமை ஊராட்சித் தலைவா் சகாயயெல்பின் தொடங்கி வைத்தாா். சுகாதார செவிலியா் பெரில்மேரி, அங்கன்வாடி அமைப்பாளா் லட்சுமி , வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் செல்வம், அந்தோனி செல்வமேரி ஆகியோா் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனா். இதில் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் விஜய், அதிகாரிகள் கலந்து கொண்டனா். இப்பணியை ஆட்சியரின் நோ்முக உதவியாளா் மைக்கேல் ஆண்டனி, சாத்தான்குளம் வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜேஷ் குமாா் ஆகியோா் ஆய்வு செய்தனா். நெடுங்குளம் ஊராட்சியில் 75 சதவீதம் போ் முதல் தவணையும், 50 சதவீதம் போ் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.