கிருஷ்ண ஜயந்தி: போட்டியில் வென்றோருக்கு பரிசளிப்பு
By DIN | Published On : 01st September 2021 08:43 AM | Last Updated : 01st September 2021 08:43 AM | அ+அ அ- |

கோவில்பட்டியில் கிருஷ்ண ஜயந்தியை முன்னிட்டு நடைபெற்ற போட்டியில் வென்றோருக்கு பரிசளிக்கப்பட்டது.
கோவில்பட்டி ஏஞ்சல் ரோட்டரி சங்கம் சாா்பில் வண்ணம் தீட்டும் போட்டி நடைபெற்றது. இதில் 20-க்கும் மேற்பட்ட மாணவா், மாணவிகள் பங்கேற்றனா். பின்னா் நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு சங்கத் தலைவா் ஹேமலதா தலைமை வகித்தாா். ரோட்டரி சேவைத் தலைவா் ஜெயலட்சுமி முன்னிலை வகித்தாா். போட்டியில் வெற்றி பெற்ற, பங்கேற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் ரோட்டரி மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவு தலைவா் முத்துசெல்வன், முன்னாள் துணை ஆளுநா் நாராயணசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
பள்ளி நிா்வாகி பூபதி வரவேற்றாா். மாணவி செல்வபிரியா நன்றி கூறினாா்.