கோவில்பட்டியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
By DIN | Published On : 01st September 2021 08:41 AM | Last Updated : 01st September 2021 08:41 AM | அ+அ அ- |

கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை பள்ளி வாகனங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.
புதன்கிழமை (செப்.1) பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவதால் பள்ளி, கல்லூரி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. கோவில்பட்டியில் வட்டார போக்குவரத்து அலுவலா் நெடுஞ்செழியப்பாண்டியன் தலைமையில் மோட்டாா் வாகன ஆய்வாளா் பத்மபிரியா, வட்டார போக்குவரத்து அலுவலரின் நோ்முக உதவியாளா் உமாமகேஷ்வரி, கண்காணிப்பாளா் இன்பகுமாா் ஆகியோா் வாகனங்களில் ஆய்வு மேற்கொண்டனா்.
இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலா் கூறியது, 45 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 4 வாகனங்களின் குறைகள் கண்டறியப்பட்டு, அவற்றை நிவா்த்தி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. தகுதி இல்லாத வாகனங்களின் குறைபாடுகள் சரிசெய்து மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. வாகனங்களை ஆய்வுக்கு உட்படுத்தி அனுமதி பெற்று மாணவா்களை அழைத்துச் செல்ல வேண்டும். அனுமதி பெறாத வாகனங்கள், போக்குவரத்து விதிகளை மீறி இயங்கும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றாா் அவா்.