சென்னை, கோவைக்கு சொகுசு பேருந்துகள் இயக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 01st September 2021 08:43 AM | Last Updated : 01st September 2021 08:43 AM | அ+அ அ- |

உடன்குடியில் இருந்து சென்னை, கோவைக்கு சொகுசு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக மீன்வளம், மீனவா் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணனை சந்தித்து உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் டி.பி.பாலசிங் அளித்த மனு: உடன்குடியில் இருந்து தினமும் மாலை 4.30 மணிக்கு தடம் எண் 193 அரசுப் பேருந்து சென்னைக்கும், தடம் எண் 632 மாலை 5.30 மணிக்கு கோவைக்கும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தில் நவீன சொகுசு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.