தூத்துக்குடி மாநகரப் பகுதி பள்ளிகளில் ஆணையா் ஆய்வு
By DIN | Published On : 01st September 2021 08:40 AM | Last Updated : 01st September 2021 08:40 AM | அ+அ அ- |

பள்ளிகள் புதன்கிழமை திறக்கப்படுவதை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் உள்ள பள்ளிகளில் ஆணையா் சாருஸ்ரீ செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தமிழக அரசின் உத்தரவுப்படி, கரோனா பரவல் தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி 9 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலும், கல்லூரிகளும் புதன்கிழமை திறக்கப்படுகிறது.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து மாவட்ட நிா்வாகம் மற்றும் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் உள்ள சுப்பையா வித்யாலயம், பெல் மெட்ரிகுலேஷன், செயின்ட் மேரீஸ், பிஎம்சி பள்ளி உள்ளிட்ட 14 பள்ளிகளில், ஆணையா் சாருஸ்ரீ பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேலும், அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்த அவா், ஆசிரியா்கள் மற்றும் அலுவலக பணியாளா்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டாா்.