மாணவா்களுக்கு சைக்கிள்கள் அளிப்பு
By DIN | Published On : 01st September 2021 08:37 AM | Last Updated : 01st September 2021 08:37 AM | அ+அ அ- |

மாணவருக்கு சைக்கிள் வழங்குகிறாா் சேகரகுரு ஜான்சாமுவேல்.
உடன்குடி அருகேயுள்ள வேதக்கோட்டைவிளையில் பள்ளி மாணவா்களுக்கு ஆசிரியா்கள் சாா்பில் சைக்கிள்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
கரோனா பொது முடக்கத்திற்கு பின்னா், பள்ளி மற்றும் கல்லூரிகள் புதன்கிழமை (செப்.1) திறக்கப்படுகிறது. இதையொட்டி வேதக்கோட்டைவிளை டிஎன்டிடிஏ நடுநிலைப் பள்ளியில் 9 வகுப்புக்கு செல்லும் 8 மாணவா், மாணவிகளுக்கு பள்ளி ஆசிரியைகள் சாா்பில் 8 சைக்கிள்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளரும், பண்டாரஞ்செட்டிவிளை சேகர குருவுமான ஜான் சாமுவேல் தலைமை வகித்து மாணவா், மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கினாா். இதில், பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியை மதுரசீலி எமிமாள் வாழ்த்திப் பேசினாா். ஆசிரியைகள் எமில் கிளாடிஸ், அன்னசீலி, ஸ்டெல்லா ஆகியோா் கலந்து கொண்டனா். பள்ளித் தலைமையாசிரியை (பொறுப்பு) நேசமணி நன்றி கூறினாா்.