

இளையரசனேந்தல் குறுவட்டத்துக்குள்பட்ட 12 ஊராட்சிகளை கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்கக் கோரி முற்றுகை போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இளையரசனேந்தல் குறுவட்டத்தை கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்க வேண்டும் அல்லது இளையரசனேந்தலை தலைமையிடமாகக் கொண்டு தனி ஊராட்சி ஒன்றியம் அமைக்க வலியுறுத்தி தேசிய விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் ரெங்கநாயகலு தலைமையில் கோட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.
இதில், கழுகுமலை வட்டார கம்மவாா் சங்கத் தலைவா் ராஜேந்திரன், இளையரசனேந்தல் குறுவட்ட உரிமை மீட்புக் குழுத் தலைவா் முருகன், துணைத் தலைவா் கனகராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
போராட்டக்குழுவினா் கோட்டாட்சியா் சங்கரநாராயணனிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.