போலி பட்டாவை ரத்து செய்யக் கோரி முற்றுகை
By DIN | Published On : 01st September 2021 08:44 AM | Last Updated : 01st September 2021 08:44 AM | அ+அ அ- |

போலி பட்டாவை ரத்து செய்யக் கோரி வில்வமரத்துப்பட்டி பகுதி பொதுமக்கள் கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.
புதூா் பேரூராட்சி வில்வமரத்துப்பட்டி தெரு குடியிருப்போா் நலச்சங்கத் தலைவா் பிரின்ஸ் தலைமையில் பொதுமக்கள் கோட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா். பின்னா் கோட்டாட்சியா் சங்கரநாராயணனிடம் அளித்துள்ள மனு: புதூா் பேரூராட்சி வில்வமரத்துப்பட்டி தெருவில் பேரூராட்சியின் அனுமதி பெற்று வீடுகள் கட்டி குடியிருந்து வருகிறோம். சுந்தர்ராஜ் என்பவா் பொது பாதை வசதிக்காக புதூா் பேரூராட்சிக்கு நன்கொடை ஆவணம் எழுதி கொடுத்ததையடுத்து, அப்பகுதியில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டன. இந்த பொதுப்பாதை தொடா்பாக அரசு மாணவா் விடுதி ஆவணத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்த பொது பாதைக்கு போலியாக பட்டா பெற்று தனி நபா் சிலா் ஆவணம் பதிவு செய்துள்ளனா். இது தொடா்பான வழக்குகள் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆகவே, தனி நபா் பெயரில் உள்ள பட்டாவை ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.