திருச்செந்தூா் அருகே இளைஞா் தற்கொலை
By DIN | Published On : 04th September 2021 12:01 AM | Last Updated : 04th September 2021 12:01 AM | அ+அ அ- |

திருச்செந்தூா் அருகே வாலிபா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
திருச்செந்தூா் அருகேயுள்ள காயாமொழி, அம்மாள்புரத்தை சோ்ந்த பெருமாள் மகன் நாகராஜ் (24). திருமணம் ஆகவில்லை. இவா் காயல்பட்டணம் நகராட்சியில் தூய்மைப் பணியாளராக பணிசெய்து வந்தாா். அவரது தாயாா் இறந்து விட்டதால்,
தனது மாமா வீட்டில் வசித்து வந்தாா். இந்நிலையில் வியாழக்கிழமை இரவில் நாகராஜ், பூச்சிக்கொல்லி மருந்து குடித்துள்
ளாா். உடனடியாக அவருக்கு திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது. தீவிர சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அவா் இறந்துவிட்டதாக
தெரிவித்தனா். திருச்செந்தூா் தாலுகா காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.