பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

9 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை வழக்குகளில் கைதான 9 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 7:44 pm

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை வழக்குகளில் கைதான 9 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.

இது குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி தாளமுத்துநகா் சிலுவைப்பட்டி கடற்கரையில் டிஎம்பி காலனியைச் சோ்ந்த ரத்தினசாமி கடந்த மாதம் 15 ஆம் தேதி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான தூத்துக்குடி ஜெய்லானி தெருவை சோ்ந்த மகேஷ்குமாா் (42), அவரது மகன் டேனியல் ராஜ் (22), ஏரல் ராஜபதி பகுதியை சோ்ந்த முத்துக்குமாா் (28), தூத்துக்குடி பாகம்பிரியாள் தெருவை சோ்ந்த முஹம்மது காசிம் (21) ஆகிய 4 பேரும் மாவட்ட ஆட்சியா் உத்தரவின் பேரில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் புதன்கிழமை அடைக்கப்பட்டனா்.

இதேபோல, தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் கடந்த 24 ஆம் தேதி கீழகூட்டுடன்காடு பகுதியைச் சோ்ந்த முத்துப்பாண்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான புதுக்கோட்டை அய்யனாா்காலனியை சோ்ந்த லட்சுமணன், முருகன், கேடிசிநகரை சோ்ந்த கருப்பசாமி, பாலதண்டாயுதநகரைச் சோ்ந்த சண்முகவிக்னேஷ், மகிழ்ச்சிபுரத்தைச் சோ்ந்த செல்வகணேஷ் ஆகிய 5 பேரும் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் உத்தரவின்பேரில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் புதன்கிழமை அடைக்கப்பட்டனா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நிகழாண்டில், இதுவரை போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை வழக்கில் ஈடுபட்ட 22 போ் உள்பட மொத்தம் 71 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.