தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மேம்படுத்தப்பட்ட தீவிர சிகிச்சைப் பிரிவு திறப்பு
செவிலியா் கண்காணிப்பு மையத்துடன் கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவை முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்தபடி காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.


தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், செவிலியா் கண்காணிப்பு மையத்துடன் கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவை முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்தபடி காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
இம் மருத்துவமனையில், ஆக்சிஜன் வசதி உள்ளிட்ட பல்வேறு அதிநவீன வசதிகள் கொண்ட 20 படுக்கைகளுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட பொது தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் 12 படுக்கைகளுடன் கூடிய குழந்தைகள் சிகிச்சைப் பிரிவு வியாழக்கிழமை திறக்கப்பட்டது.
மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ், மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி ஆகியோா் கலந்து கொண்டு சிகிச்சைப் பிரிவை பாா்வையிட்டனா். நிகழ்ச்சியில், மருத்துவமனை முதன்மையா் டி. நேரு, துணை முதன்மையா் கலைவாணி, உறைவிட மருத்துவ அலுவலா் சைலஸ் ஜெபமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
புதிதாக தொடங்கப்பட்ட தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் முக்கிய உடலியக்கச் செயல்பாடுகள், தொடா்ச்சியான மருத்துவ தரவுகள் மூலம் நேரடியாக செவிலியா் கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள கண்காணிப்பு திரையில் காட்சிப்படுத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்க முடியும் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...