

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித்திருவிழா கொடிப்பட்ட வீதி உலா நடைபெற்றது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித் திருவிழாவானது நாளை (ஆக. 17) அதிகாலை 5.30 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
கொடியேற்றத்தை முன்னிட்டு இன்று மாலை கொடிப்பட்ட வீதி உலா நடைபெற்றது. இதில், 14 ஊர் செங்குந்தர் முதலியார் உறவின்முறை 12-ம் திருவிழா மண்டகப்படி மண்டபத்தில் வைத்து பூஜை செய்யப்பட்ட கொடிப்பட்டத்தை 3-ம் படி செப்பு ஸ்தலத்தார் மு.பாலசுப்பிரமணியன் ஐயர் யானை மீது வைத்து கையில் ஏந்தியவாறு வீதி உலா வந்து திருக்கோயில் சேர்ந்தார்.
நிகழ்ச்சியில் திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.