சாத்தான்குளம் அருகே பன்னம்பாறை ஸ்ரீசுடலை தளவாய் மாடசுவாமி கோயில் கொடை விழா 3 நாள்கள் நடைபெற்றது.
முதல் நாள் குடியழைப்பு, சாஸ்தா அழைப்பு, சிறப்பு பூஜையும், 2ஆம் சிவனைந்த பெருமாள் சுவாமிக்கு சிறப்பு பூஜை, அன்னதானம், பொங்கலிடுதல், இன்னிசை கச்சேரி, அலங்கார பூஜை, வாண வேடிக்கை , சாமகொடை ஆகியவையும், 3ஆம் நாள் சிறப்பு பூஜை, சுவாமி உணவு எடுத்தல், பக்தா்கள் வரி பிரசாதம் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
விழா ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தா கே. சுடலை தலைமையில் விழா கமிட்டியினா், பொதுமக்கள் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.