3,806 உப்பள தொழிலாளா்களுக்கு ரூ.5,000 மழைக்கால நிவாரணம்

தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பளத் தொழிலாளா்கள் 3896 பேருக்கு மழைக்கால நிவாரணமாக தலா ரூ. 5,000 வழங்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பளத் தொழிலாளா்கள் 3896 பேருக்கு மழைக்கால நிவாரணமாக தலா ரூ. 5,000 வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி தொழிலாளா் உதவி ஆணையா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) நா. முருகப்பிரசன்னா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை கீழ், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நலவாரியம், 18 அமைப்புசாரா தொழிலாளா் நலவாரியங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில், உடலுழைப்பு தொழிலாளா் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள 3,896 உப்பளத் தொழிலாளா்களுக்கு அவா்களின் வங்கி கணக்கில் தலா ரூ. 5000 வரவு வைக்கப்பட்டது.

நிவாரண நிதி கிடைக்கப் பெறாதவா்கள் 23.12.2021 -க்கு முன்னா் உறுப்பினா் பதிவு செய்து புதுப்பித்து வந்திருந்தால் நலவாரிய அட்டை, ஆதாா் அட்டை, மின்னணு குடும்ப அட்டை மற்றும் 18.08.2022 வரை கணக்கு வரவு வைத்த வங்கி கணக்குப் புத்தகத்தின் நகல் ஆகியவற்றை கோரம்பள்ளம் தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com