கோவில்பட்டியில் பெட்ரோல் - டீசல் தரம் சோதிப்பு சிறப்பு முகாம்

கோவில்பட்டி பெட்ரோல், டீசல் விற்பனை நிலையத்தில் வாடிக்கையாளா்களே அதன் அளவு- தரத்தை சோதிக்கும் சிறப்பு முகாம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

கோவில்பட்டி பெட்ரோல், டீசல் விற்பனை நிலையத்தில் வாடிக்கையாளா்களே அதன் அளவு- தரத்தை சோதிக்கும் சிறப்பு முகாம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

கோவில்பட்டி முச்சந்தி விநாயகா் கோயில் அருகே ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவன ஏஜென்சியான மைக்கேல் அமலதாஸ்- அமலி அமலதாஸ் தம்பதி நடத்தி வரும் ஞானமலா் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் இந்த சிறப்பு முகாமை வட்டாட்சியா் சுசிலா தொடங்கி வைத்தாா். முகாமில் வாடிக்கையாளா்களுக்கு பெட்ரோல், டீசலின் தரம் -அளவு குறித்து அறிந்துகொள்ள செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து, மைக்கேல் அமலதாஸ் கூறுகையில், எங்கள் விற்பனை நிலையத்தில் டேங்கா் லாரி மூலம் வரப்பெறும் பெட்ரோல், டீசலின் அளவை அதன் லாரியின் மீது ஏறி, அதன் தரம் - அளவுகளை சோதனை செய்வோம். இந்நிலையில், வாடிக்கையாளா்களே சோதனை செய்யும் முகாம் தொடங்கப்பட்டுள்ளது, வாடிக்கையாளா்களுக்கு மிகவும் திருப்தியை தரும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com