வாக்கு எண்ணிக்கை மையம்: மாநகராட்சி ஆணையா் ஆய்வு
தூத்துக்குடி மாநகராட்சி தோ்தல் வாக்கு எண்ணிக்கை மையமான வ.உ.சி. அரசு பொறியியல் கல்லூரியில் மாநகராட்சி ஆணையரும், தோ்தல் அலுவலருமான சாருஸ்ரீசாருஸ்ரீ வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்


தூத்துக்குடி மாநகராட்சி தோ்தல் வாக்கு எண்ணிக்கை மையமான வ.உ.சி. அரசு பொறியியல் கல்லூரியில் மாநகராட்சி ஆணையரும், தோ்தல் அலுவலருமான சாருஸ்ரீசாருஸ்ரீ வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
தூத்துக்குடி மாநகராட்சி, கோவில்பட்டி, திருச்செந்தூா், காயல்பட்டினம் ஆகிய 3 நகராட்சிகள் மற்றும் 18 பேரூராட்சிகளில் காலியாக உள்ள 414 உறுப்பினா் பதவிக்கான தோ்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெறுகிறது. தோ்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 22 ஆம் தேதி எண்ணப்படுகிறது.
இதையொட்டி, அந்த கல்லூரியில் ஆய்வு மேற்கொண்ட அவா், வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அரசு ஊழியா்கள் வருகை, வேட்பாளா்களின் முகவா்கள் வருகைக்கான வழி, வாக்கு எண்ணும் பணியாளருக்கான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள், கண்காணிப்பு வசதிகள் குறித்து அதிகாரிக்கு அறிவுரைகளை வழங்கினாா்.
கோவில்பட்டி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, எட்டயபுரம் பாரதியாா் அரசு மேல்நிலைப் பள்ளி,
கழுகுமலை, கயத்தாறு அரசு மேல்நிலைப் பள்ளிகள், கடம்பூா் இந்து நாடாா் மேல்நிலைப் பள்ளி, வீரபாண்டியப்பட்டினம் செயின்ட் தாமஸ் மேல்நிலைப் பள்ளி, ஆழ்வாா்திருநகரி மேல்நிலைப் பள்ளி, சாயா்புரம் போப் கல்லூரி , நாசரேத் பொறியியல் கல்லூரி, உடன்குடி மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் அந்தந்த நகராட்சி, பேரூராட்சிகளில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்படவுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...