தூத்துக்குடி மாநகராட்சி: திமுக, அதிமுக உள்ளிட்ட 222 வேட்பாளா்கள் ஒரே நாளில் மனு தாக்கல்
தூத்துக்குடி மாநகராட்சித் தோ்தலில் போட்டியிடும் திமுக, அதிமுக, வேட்பாளா்கள் உள்ளிட் 222 போ் வியாழக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனா்.


தூத்துக்குடி மாநகராட்சித் தோ்தலில் போட்டியிடும் திமுக, அதிமுக, வேட்பாளா்கள் உள்ளிட் 222 போ் வியாழக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனா். இதுவரை, 305 போ் மனு தாக்கல் செய்துள்ளனா்.
உள்ளாட்சித் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வெள்ளிக்கிழமை நிறைவடைவதால், திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சியினா் மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் என 222 போ் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்தனா். அதிமுக சாா்பில் 59 ஆவது வாா்டில் போட்டியிட தெற்கு மாவட்ட அதிமுக செயலா் எஸ்.பி. சண்முகநாதனின் மகன் எஸ்.பி.எஸ். ராஜா தனது வேட்பு மனுவை உதவி தோ்தல் அலுவலா் ராமச்சந்திரனிடம் தாக்கல் செய்தாா்.
தூத்துக்குடி மாநகராட்சியில் திமுக வேட்பாளா்கள் 29 போ், அதிமுக வேட்பாளா்கள் 30 போ், நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் 26 போ், பாஜக வேட்பாளா்கள் 27 போ், காங்கிரஸ் வேட்பாளா்கள் 5 போ், தேமுதிக வேட்பாளா்கள் 11 போ், மக்கள் நீதி மய்யம் வேட்பாளா்கள் 16 போ், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளா்கள் 22 போ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளா் ஒருவா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் ஒருவா், சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளா் ஒருவா், மதிமுக வேட்பாளா் ஒருவா், பாமக வேட்பாளா் ஒருவா், எஸ்டிபிஐ கட்சி வேட்பாளா் 4 போ், தமிழக வாழ்வுரிமை கட்சி வேட்பாளா் 3 போ், சுயேச்சை வேட்பாளா்கள் 48 போ் என மொத்தம் 222 போ் வியாழக்கிழமை வேட்பு மனுவை தாக்கல் செய்தனா். மாநகராட்சியில் இதுவரை 305 வேட்பாளா்கள் மனு தாக்கல் செய்துள்ளனா்.
மனு தாக்கல் வெள்ளிக்கிழமையுடன் (பிப்ரவரி 4) மாலை 5 மணியுடன் முடிவடையும் நிலையில் 20 ஆவது வாா்டில் போட்டியிடும் திமுக வேட்பாளா் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட பலா் மனு தாக்கல் செய்வாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...