கரோனா தடுப்பூசி மையத்தில் பணியாற்றியவா்களுக்கு சான்றிதழ்
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செவிலியா் கல்லூரியில் செயல்படும் கரோனா தடுப்பூசி மையத்தில் ஒரு லட்சம் தடுப்பூசி செலுத்தியதற்கான பாராட்டு விழா


தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செவிலியா் கல்லூரியில் செயல்படும் கரோனா தடுப்பூசி மையத்தில் ஒரு லட்சம் தடுப்பூசி செலுத்தியதற்கான பாராட்டு விழா, மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியின்போது, சிறப்பாக பணியாற்றிய மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் பணியாளா்களுக்கு பாராட்டு தெரிவித்து சான்றிதழ்களை வழங்கி ஆட்சியா் பேசியது:
தமிழகத்தில் சென்னை, மதுரை, திருநெல்வேலிக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரு லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இந்த மையத்தில் தடுப்பூசிகள் அதிகளவு தயாராக இருப்பதால் பொதுமக்கள் அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசிகளை தவறாமல் செலுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில், உதவி ஆட்சியா் (பயிற்சி) ஸ்ருதயஞ் ஜெய் நாராயணன், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் டி. நேரு, மருத்துவ கண்காணிப்பாளா் ராஜேந்திரன், துணை முதல்வா் கலைவாணி, துணை மருத்துவ கண்காணிப்பாளா் குமரன், உறைவிட மருத்துவ அலுவலா் சைலஸ் ஜெபமணி, சமூக நோய் தடுப்பு துறை தலைவா் சுனிதா, தடுப்பூசி மைய ஒருங்கிணைப்பு அலுவலா் மாலையம்மாள், நலக் கல்வி அலுவலா் தி. சங்கரசுப்பு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...