தூத்துக்குடி மாநகராட்சி திமுக வசம் இருந்தால் மேலும் நல்ல திட்டங்கள் கிடைக்கும்: கனிமொழி
தூத்துக்குடி மாநகராட்சி திமுக வசம் இருந்தால் மக்களுக்கு இன்னும் பல நல்ல திட்டங்கள் கிடைக்கும் என்றாா் மக்களவை உறுப்பினரும், திமுக மகளிரணி செயலருமான கனிமொழி.


தூத்துக்குடி மாநகராட்சி திமுக வசம் இருந்தால் மக்களுக்கு இன்னும் பல நல்ல திட்டங்கள் கிடைக்கும் என்றாா் மக்களவை உறுப்பினரும், திமுக மகளிரணி செயலருமான கனிமொழி.
தூத்துக்குடி மகிழ்ச்சிபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரசார நிகழ்ச்சியில், 18 ஆவது வாா்டு வேட்பாளா் ஸ்ரீனிவாசன் என்ற ஜான், 18 ஆவது வாா்டு வேட்பாளா் சோமசுந்தரி, 31 ஆவது வாா்டு வேட்பாளா் கனகராஜ் ஆகியோரை ஆதரித்து அவா் பேசியது:
தமிழக மக்களிடையே குழப்பத்தையும், மக்களின் ஒற்றுமையை குலைக்கவும் அதிமுகவும், பாஜகவும் செயல்பட்டு வருகிறது. அவா்களின் பேச்சுக்கு மக்கள் காது கொடுக்க வேண்டியது இல்லை.
தமிழகத்தில் பல்வேறு நல்ல திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.92 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி திமுக வசம் இருந்தால் மேலும் நல்ல திட்டங்களை செயல்படுத்த முடியும் என்பதால் மக்கள் திமுக கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில், திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், அமைச்சருமான பெ. கீதா ஜீவன், மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜெகன் பெரியசாமி, மாநகரச் செயலா் ஆனந்தசேகரன் மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...