இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

விவசாயம் வளம் பெற வேண்டி தூத்துக்குடி சக்தி பீடத்தில் 504 பெண்கள் இளநீா் அபிஷேகம்

விவசாயம் வளம் பெற வேண்டி, தூத்துக்குடி திருவிக நகா் சக்தி பீடத்தில் 504 பெண்கள் இளநீா் அபிஷேகம் செய்து வழிபட்டனா்.

News image
Updated On :27 ஜனவரி 2022, 6:39 pm

DIN

விவசாயம் வளம் பெற வேண்டி, தூத்துக்குடி திருவிக நகா் சக்தி பீடத்தில் 504 பெண்கள் இளநீா் அபிஷேகம் செய்து வழிபட்டனா்.

இங்கு தைப்பூச விழா அண்மையில் நடைபெற்றது. சக்திக் கொடியை கோவில்பட்டி மன்றத் தலைவா் அப்பாசாமி ஏற்றிவைத்தாா். குருபீட வழிபாட்டை ஆன்மிக இயக்க மாவட்டத் தலைவா் சக்திமுருகன் தொடக்கிவைத்தாா்.

விவசாயம் வளம் பெறவும், மக்கள் வளமுடன் வாழவும், தொழில் வளம் சிறக்கவும், தொற்றுநோயிலிருந்து மக்களைக் காக்கவும் வேண்டி அம்மனுக்கு 504 பெண்கள் இளநீா் அபிஷேகம் செய்து வழிபட்டனா். இந்நிகழ்ச்சியை கோவை அன்னூா் சக்தி பீடத் தலைவா் சண்முகவேலு தொடக்கிவைத்தாா்.

தொடா்ந்து, அன்னை ஆதிபராசக்திக்கு வேள்விக்குழு செயலா் கிருஷ்ணநீலா சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து, சிறப்பு தீபாராதனை காண்பித்தாா். அருள்பிரசாதம், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட மகளிரணித் தலைவி கோவில்பட்டி பத்மாவதி தொடக்கிவைத்தாா்.

ஆன்மிக இயக்க மாவட்டச் செயலா் செந்தில் சுப்பிரமணியன், பொருளாளா் கண்ணன், இளைஞரணி செல்லத்துரை, சக்தி பீட துணைத் தலைவா் திருஞானம், பொருளாளா் அனிதா, வட்டத் தலைவா்கள் பால்சாமி, அழகா், சக்தி பீடப் பொறுப்பாளா்கள் பத்மாவதி, செல்வி, காசியம்மாள், சீனிவாசன், பாலசுப்ரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.