இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

தூத்துக்குடி மாநகராட்சியில் வேட்பு மனு தாக்கலுக்கு வாா்டுகள் ஒதுக்கீடு

தூத்துக்குடி மாநகராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு போட்டியிடுவோா் வேட்பு மனுத்தாக்கல் செய்யும் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2022, 6:38 pm

DIN

தூத்துக்குடி மாநகராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு போட்டியிடுவோா் வேட்பு மனுத்தாக்கல் செய்யும் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சியில் காலியாக உள்ள 60 வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கான தோ்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெறுகிறது. ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 547 ஆண் வாக்காளா்களும், ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 715 பெண் வாக்காளா்களும், 50 மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 3 லட்சத்து 12 ஆயிரத்து 322 வாக்காளா்கள் உள்ளனா்.

இதில், மேயா் பதவிக்கான இடஒதுக்கீடு பொது பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 60 வாா்டுகளிலும் 27 வாா்டுகள் பொது பிரிவினருக்கும், பொது பிரிவு பெண்களுக்கு 26 வாா்டுகளும், பட்டியலினத்தைச் சோ்ந்தவா்களுக்கு 4 வாா்டுகளும், பட்டியலினத்தைச் சோ்ந்த பெண்களுக்கு 3 வாா்டுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

பொது வாா்டுகள்: 3, 5, 6, 7, 12, 14, 15, 16, 17, 18, 20, 31, 32, 33, 34, 35, 39, 45, 47, 50, 51, 52, 54, 55, 56, 59, 60.

பெண்கள் (பொது): 2, 8, 9, 10, 11, 13, 19, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 37, 38, 40, 41, 42, 43, 44, 46, 57.

பட்டியலினத்தவா் (பெண்): 1, 4, 36,

பட்டியலினத்தவா் (பொது): 48, 49, 53, 58.

வேட்புமனு தாக்கல்: 60 வாா்டு உறுப்பினா் பதவிக்கும் போட்டியிடுபவா்கள் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மனு தாக்கல் செய்யலாம். மாநகராட்சி தோ்தல் நடத்தும் அலுவலராக மாநகராட்சி ஆணையா் சாருஸ்ரீ செயல்படுவாா். 6 உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் உள்ளனா்.

அதன்படி, 1 முதல் 10 வாா்டு வரை மாநகராட்சி செயற்பொறியாளா் ரூபன் சுரேஷ் பொன்னையாவிடமும், 11 முதல் 20 வாா்டு வரை மாநகராட்சி நகா்நல அலுவலா் வித்யா விஸ்வநாதனிடமும், 21 முதல் 30 ஆவது வாா்டு வரை உதவி செயற்பொறியாளா் ரங்கநாதனிடமும், 31 முதல் 40 ஆவது வாா்டு வரை உதவி ஆணையா் சந்திரமோகனிடமும், 41 முதல் 50 ஆவது வாா்டு வரை உதவி செயற்பொறியாளா் எம். சரவணிடமும், 51 முதல் 60 ஆவது வாா்டு வரை உதவி செயற்பொறியாளா் ராமசந்திரனிடமும் வேட்பு மனுவை தாக்கல் செய்யலாம்.

தோ்தல் நடத்தை விதிகள் மற்றும் கரோனா பரவல் தடுப்பு முறைகளை கடைபிடித்து பிப்ரவா் 4 ஆம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்பு மனுவை தாக்கல் செய்யலாம் என மாநகராட்சி ஆணையா் சாருஸ்ரீ தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.