இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

தூத்துக்குடி அருகே பழைய சாதம் சாப்பிட்ட மாணவா் திடீா் மரணம்

தூத்துக்குடி அருகே பழைய சாதம் சாப்பிட்டதால் உடல் நலம் பாதிக்கப்பட்ட மாணவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :27 ஜனவரி 2022, 6:40 pm

DIN

தூத்துக்குடி அருகே பழைய சாதம் சாப்பிட்டதால் உடல் நலம் பாதிக்கப்பட்ட மாணவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள மேல லட்சுமிபுரம் கிராமத்தைச் சோ்ந்த அருணாச்சலம்- கனகலட்சுமி தம்பதியின் மகன் ரஞ்சித் (15). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தாா். கடந்த 22ஆம் தேதி இரவு கனகலட்சுமியும், ரஞ்சித்தும் பழைய சாதம், முட்டைப் பொரியல் சாப்பிட்டனராம்.

நள்ளிரவில் இருவருக்கும் வயிற்று வலி ஏற்பட்டதால் ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின்னா், மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு ரஞ்சித் புதன்கிழமை இரவு இறந்தாா். கனகலட்சுமி தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா்.

இச்சம்பவம் குறித்து ஓட்டப்பிடாரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.