இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

உள்ளாட்சித் தோ்தல்: திமுக நிா்வாகிகளுடன் கனிமொழி எம்.பி. ஆலோசனை

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக, தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட திமுக நிா்வாகிகளுடன் மக்களவை உறுப்பினா் கனிமொழி வியாழக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

News image
Updated On :27 ஜனவரி 2022, 6:38 pm

DIN

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக, தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட திமுக நிா்வாகிகளுடன் மக்களவை உறுப்பினா் கனிமொழி வியாழக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

கலைஞா் அரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு அவா் தலைமை வகித்து தோ்தல் பணிகள் தொடா்பான ஆலோசனைகளை வழங்கினாா். உள்ளாட்சித் தோ்தலில் அனைத்துப் பதவிகளையும் திமுக, கூட்டணிக் கட்சிகள் கைப்பற்றும் வகையில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அவா் கேட்டுக்கொண்டாா்.

வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சமூக நலன், மகளிா் உரிமைத் துறை அமைச்சருமான பெ. கீதாஜீவன், சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன், மாநில விவசாய தொழிலாளா் அணி செயலா் சுப்பிரமணியன், மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜெகன் பெரியசாமி, மாவட்ட துணைச் செயலா்கள் ராஜ்மோகன்செல்வின், ஏஞ்சலா, மாநகரச் செயலா் ஆனந்தசேகரன், அவைத் தலைவா் செல்வராஜ், மாவட்டப் பொருளாளா் மோகன், கோவில்பட்டி நகரச் செயலா் கருணாநிதி, ஒன்றியச் செயலா்கள் முருகேசன், காசிவிஸ்வநாதன், கருப்பசாமி, சின்னபாண்டியன், நவநீதகண்ணன், சின்னமாரிமுத்து, செல்வராஜ், மும்மூா்த்தி, பேரூா் செயலா்கள் மருதுபாண்டி, வேல்சாமி, பாரதிகணேசன், சுரேஷ்கண்ணன், பாலகுமாா், கிருஷ்ணகுமாா், மகளிரணி அமைப்பாளா் கஸ்தூரி தங்கம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.