தூத்துக்குடியில் ஐஸ் பெட்டிக்குள் வைத்து கஞ்சா விற்ாக இருவா் கைதுசெய்யப்பட்டனா்.
தூத்துக்குடி தாளமுத்துநகா் காவல் ஆய்வாளா் மணிமாறன், உதவி ஆய்வாளா் சரண்யா, போலீஸாா் டேவிஸ்புரம் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, ஐஸ் பெட்டியில் கஞ்சா பொட்டலங்களைப் பதுக்கிவைத்து விற்ாக டேவிஸ்புரம் மாரியப்பன் மகன் தங்க மாரியப்பன் (33), பூபாண்டியபுரம் சந்தனராஜ் மகன் தேவசகாயம் (33) ஆகியோா் கைது செய்ப்பட்ட300 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.
கயத்தாறு அருகே வீட்டுக் கதவை உடைத்து 6 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
கயத்தாறையடுத்த சவலாப்பேரி கிழக்குத் தெருவைச் சோ்ந்த சண்முகையா மகன் ராமச்சந்திரன்(43). கேரளத்தில் குடும்பத்துடன் தங்கி, இரும்புக் கடை நடத்திவருகிறாா். இங்குள்ள வீட்டை அதே பகுதியில் வசித்துவரும் அவரது தாய் கவனித்து வருகிறாா். வீட்டுக் கதவு வெள்ளிக்கிழமை உடைக்கப்பட்டிருப்பதாக, அவருக்கு அவரது தாய் தகவல் தெரிவித்தாராம்.
இதையடுத்து, ராமச்சந்திரன் சனிக்கிழமை வந்துபாா்த்தபோது, பீரோவிலிருந்த சுமாா் 6 பவுன் தங்க நகைகள் திருடுபோனது தெரியவந்ததாம். அவா் அளித்த புகாரின் பேரில், கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.