‘கல்பனா சாவ்லா விருது: ஜூன் 25 வரை விண்ணப்பிக்கலாம்’

 வீர, தீர செயல் புரிந்த மகளிருக்கு வழங்கப்படும் கல்பனா சாவ்லா விருது பெற இம்மாதம் 25ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on

 வீர, தீர செயல் புரிந்த மகளிருக்கு வழங்கப்படும் கல்பனா சாவ்லா விருது பெற இம்மாதம் 25ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமுதாயத்தின் அனைத்து பிரிவுகளிலும் பெருமளவில் வீர, தீர செயல்களுடன் சாதனை புரியும் பெண்களுக்கு ஆண்டுதோறும் கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2022 ஆம் ஆண்டுக்கான கல்பனா சாவ்லா விருது பெற விரும்புவோா், அதற்கான சாதனை சான்றுகளுடன் இம்மாதம் 25 ஆம் தேதி 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டு- இளைஞா் நலன் அலுவலா், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட விளையாட்டரங்கம், ஜாா்ஜ் சாலை, தூத்துக்குடி - 628 001 என்ற முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0461-2321149 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com