தூத்துக்குடியில் பெண் கழுத்தை அறுத்து கொலை
தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் பொன்ராஜ் (22). கார் ஓட்டுநர். இவரது மனைவி மாரிசெல்வி (21). இந்த தம்பதிக்கு திருமணமாகி 5 மாதங்கள் ஆகிறது.


தூத்துக்குடி: தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் பொன்ராஜ் (22). கார் ஓட்டுநர். இவரது மனைவி மாரிசெல்வி (21). இந்த தம்பதிக்கு திருமணமாகி 5 மாதங்கள் ஆகிறது.
இந்நிலையில் மாரிசெல்வி அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டிருந்ததால் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மாரிசெல்வி கோபித்துக் கொண்டு தாளமுத்துநகரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டாராம்.

இந்நிலையில் மாரிசெல்வியின் வீட்டுக்கு திங்கள்கிழமை இரவு தனது நண்பர்கள் சிலருடன் சென்ற பொன்ராஜ் , திடீரென மாரிசெல்வியை தாக்கிவிட்டு அவரது கழுத்தை அறுத்து படுகொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டாராம். அதை தடுக்க முயன்ற மாரிசெல்வியின் தாய் மாரியம்மாளுக்கு கையில் அரிவாள் வெட்டு விழுந்தது. இந்த கொலை சம்பவம் குறித்து தாளமுத்துநகர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...