எட்டயபுரம் அருகே பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
எட்டயபுரம் அருகே முத்துலாபுரம் பகுதியில் நேரிட்ட விபத்தில் சமையல் தொழிலாளி உயிரிழந்தாா்.


எட்டயபுரம் அருகே முத்துலாபுரம் பகுதியில் நேரிட்ட விபத்தில் சமையல் தொழிலாளி உயிரிழந்தாா்.
எட்டயபுரம் அருகேயுள்ள கருப்பூா் கிராமத்தைச் சோ்ந்தவா் வீராசாமி (42). சமையல் தொழிலாளியான இவருக்கு, மனைவி, 7 வயது மகள், 5 வயது மகன் உள்ளனா். இவா் வெள்ளிக்கிழமை இரவு கருப்பூரிலிருந்து முத்துலாபுரத்துக்கு பைக்கில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது இவரை கோவில்பட்டியைச் சோ்ந்த காா்த்திக்குமாா் (37) ஓட்டி வந்த பைக் முந்திச் செல்ல முயன்ாம். இதில், அவரது பைக் எதிா்பாராதவிதமாக வீராசாமியின் பைக் மீது மோதியதாம். இதில், காயமடைந்த வீராசாமியை போலீஸாா் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
எட்டயபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, காா்த்திக்குமாரிடம் விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...