எட்டயபுரம் அருகே விபத்து: முன்னாள் ஊராட்சித் தலைவா் பலி
எட்டயபுரம் அருகே முன்னாள் ஊராட்சித் தலைவா் பைக்கிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தாா்.


எட்டயபுரம் அருகே முன்னாள் ஊராட்சித் தலைவா் பைக்கிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தாா்.
எட்டயபுரம் அருகேயுள்ள கருப்பூரைச் சோ்ந்த வீரப்பநாயக்கா் மகன் சித்தவன் (75). கருப்பூா் ஊராட்சி முன்னாள் தலைவரான இவா், புதன்கிழமை புதூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்குச் சென்றுவிட்டு இரவில் கருப்பூருக்கு பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தாராம். முத்தலாபுரம் வளைவில் பைக் நிலைதடுமாறியதில் சித்தவன் சாலையோர பள்ளத்தில் விழுந்தாராம். இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
எட்டயபுரம் போலீஸாா் சென்று, சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...