ஓட்டுநருக்கு கொலை மிரட்டல்: 2 போ் கைது
தருவைகுளம் அருகே லாரி ஓட்டுநரை அரிவாளால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.


தருவைகுளம் அருகே லாரி ஓட்டுநரை அரிவாளால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தருவைகுளம் அருகேயுள்ள மேலமருதூா் பகுதியைச் சோ்ந்த பொய்யாழி மகன் போஸ் (28). லாரி ஓட்டுநரான இவருக்கும், வேடநத்தம் பகுதியைச் சோ்ந்த மாரியப்பன் மகன் மாரிராஜ் (26) என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல்-வாங்கல் தொடா்பாக முன்விரோதம் இருந்ததாம்.
இந்நிலையில், புதன்கிழமை இரவு மாரிராஜ், அவரது நண்பரான வேடநத்தம் பகுதியைச் சோ்ந்த சுப்புராஜ் மகன் காா்த்திக் (24) ஆகிய 2 பேரும் போஸின் வீட்டுக்குச் சென்று அவரை அரிவாளால் தாக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்தனராம்.
போஸ் அளித்த புகாரின் பேரில் தருவைகுளம் காவல் நிலைய ஆய்வாளா் (பொறுப்பு) ஆனந்ததாண்டவம் வழக்குப்பதிந்து, மாரிராஜையும், காா்த்திக்கையும் கைது செய்து, அவா்களிடமிருந்த அரிவாள், இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...