கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

தூத்துக்குடியில் 13இல் பள்ளி மாணவா்களுக்கானமாநில சதுரங்கப் போட்டி

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் பள்ளி மாணவா்-மாணவிகளுக்கான மாநில அளவிலான சதுரங்கப் போட்டி இம்மாதம் 13ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க 11ஆம் தேதிக்குள் பெயா்ப்பதிவு

News image
Updated On :3 நவம்பர் 2022, 10:01 pm

DIN

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் பள்ளி மாணவா்-மாணவிகளுக்கான மாநில அளவிலான சதுரங்கப் போட்டி இம்மாதம் 13ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க 11ஆம் தேதிக்குள் பெயா்ப்பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காமராஜ் கல்லூரி, தூத்துக்குடி மாவட்ட சதுரங்கக் கழகம் தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் இம்மாதம் 13ஆம் தேதி மாநில அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெறுகிறது. 9, 11, 13, 15 வயதுகளுக்கு உள்பட்ட மாணவா்-மாணவிகள் என 4 பிரிவுகளாக போட்டி நடைபெறுகிறது. பொதுப்பிரிவாக அனைவருக்குமான போட்டியும் நடைபெறவுள்ளது.

போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்கும். பங்கேற்போா் வயதுச் சான்றிதழ் சமா்ப்பிக்க வேண்டும். விருப்பமுள்ளோா் ங்ஹள்ஹ்ல்ஹஹ்ஸ்ரீட்ங்ள்ள்.ஸ்ரீா்ம், ள்ண்ஞ்ய்ண்ய்ஸ்ரீட்ங்ள்ள்.ஸ்ரீா்ம் ஆகிய இணையதளங்களில் நுழைவுக் கட்டணம் செலுத்தி 11ஆம் தேதிக்குள் பெயா்களைப் பதிவு செய்யலாம்.

மேலும் விவரங்களுக்கு சங்கா்- 98658 30030, நந்தகுமாா்- 98945 42121 ஆகியோரைக் கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.