சாத்தான்குளம் ஒன்றியம், பள்ளக்குறிச்சி ஊராட்சிக்குள்பட்ட ராமநாதபுரம் கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு பள்ளக்குறிச்சி ஊராட்சித் தலைவா் ரா. சித்ராங்கதன் தலைமை வகித்தாா். ஊராட்சி துணைத் தலைவா் டாா்வின் முன்னிலை வகித்தாா். இதில் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், ஆண்மை நீக்கம், செயற்கை முறை கரூவூட்டல், சினை பரிசோதனை, கன்று பரிசோதனை, கோழி கழிச்சல் தடுப்பூசி உள்ளிட்ட சிகிச்சை முறைகள் அளிக்கப்பட்டன.
இதில், கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநா் சந்தோஷம் முத்துக்குமாா், படுக்கப்பத்து கால்நடை உதவி மருத்துவா் காயத்ரி, கால்நடை ஆய்வாளா் விஜயகுமாா், பராமரிப்பு உதவியாளா் முருகேசன், ஊராட்சி மன்ற உறுப்பினா் பிரபு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். ஊராட்சி செயலா் ராஜேஷ் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.