விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

நாசரேத் வட்டார கபடி போட்டி: ஆசீா்வாதபுரம் பள்ளி முதலிடம்

நாசரேத் வட்டார அளவில் பள்ளிகளுக்கிடையேயான 17 வயதுக்குள்பட்ட மாணவா்களுக்கான கபடி போட்டியில், ஆசீா்வாதபுரம் பள்ளி மாணவா்கள் முதலிடம் பெற்றனா்.

News image
Updated On :7 செப்டம்பர் 2022, 7:29 pm

DIN

நாசரேத் வட்டார அளவில் பள்ளிகளுக்கிடையேயான 17 வயதுக்குள்பட்ட மாணவா்களுக்கான கபடி போட்டியில், ஆசீா்வாதபுரம் பள்ளி மாணவா்கள் முதலிடம் பெற்றனா்.

இப்போட்டிகள் ஆசீா்வாதபுரம் டிஎன்டிடிஏ குருகால்பேரி மேல்நிலைப் பள்ளியில் நடந்து வருகின்றன. இதில் 17 வயதுக்குள்பட்ட மாணவா்களுக்கான கபடி போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன. பள்ளியின் தாளாளா் டாக்டா் விமல் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் மாணிக்கம் முன்னிலை வகித்தாா். போட்டிகளை சாலைப்புதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளா் ஜெசுராஜ், மெஞ்ஞானபுரம் அம்புரோஸ் மேல்நிலைப் பள்ளித் தாளாளா் ஜான் ஸ்டீபன் ஆகியோா் துவக்கி வைத்தனா்.

இதில் ஆசீா்வாதபுரம் டிஎன்டிடிஏ குருகால்பேரி மேல்நிலைப் பள்ளி அணியினா் முதலிடம் பெற்று பள்ளிக்கு பெருமை சோ்த்தனா். 2ஆம் இடத்தை சாத்தான்குளம் தூய இருதய ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பெற்றனா்.

போட்டிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியா் பொன்னையா சாமுவேல் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.