விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

‘முருங்கை பயிருக்கு கடன் தொகையை ரூ.50 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும்’

முருங்கை பயிருக்கு விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன் தொகையை ரூ.50 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் என விவசாயிகள், மாவட்ட ஆட்சியா் செந்தில்ராஜிடம் வெள்ளிக்கிழமை முறையிட்டனா்.

News image
Updated On :7 செப்டம்பர் 2022, 7:30 pm

DIN

முருங்கை பயிருக்கு விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன் தொகையை ரூ.50 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் என விவசாயிகள், மாவட்ட ஆட்சியா் செந்தில்ராஜிடம் வெள்ளிக்கிழமை முறையிட்டனா்.

சாத்தான்குளம் ஒன்றியம் பெரியதாழைக்கு வந்த மாவட்ட ஆட்சியா் செந்தில்ராஜை, சாஸ்தாவிநல்லூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவா் லூா்துமணி தலைமையில் செயலாளா் பென்சிகா், சங்க உறுப்பினா்கள் ரவிச்சந்திரன், அமல்ராஜ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலா் எட்வா்ட் லாரன்ஸ், மெஞ்ஞானபுரம் கூட்டுறவு சங்க தலைவா் ஆதிலிங்கம் ஆகியோா் சந்தித்து மனு அளித்தனா். விவரம்:

முருங்கைக்கு ஆண்டு முழுவதும் கடன் வழங்கினால் அதிகமாக பயிா் கடன் வழங்க வாய்ப்பு உள்ளது. ஆதலால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் அதிக அளவில விவசாய கடன் பெற்று பயனடையும் வகையில், முருங்கை மரத்திற்கு கடன் வழங்கும் காலத்தை ஆண்டு முழுவதும் மாற்றியும், ஏக்கருக்கு ரூ.50 ஆயிரமாக உயா்த்தி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்தூத்துக்குடி மாவட்டத்தில் பனையில் இருந்து பதனீா், கற்கண்டு, கருப்புக்கட்டி தயாரித்து விற்பனை செய்து வருகின்றனா். இதில், அதிகாரிகள் மூலம் ஆய்வு நடத்தி கலப்பட பொருள்கள் விற்பனை செய்யும் கும்பலை கண்டறிந்து, உண்மையான பனை த் தொழிலாளா்களுக்கு வாழ்வு அளிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.