விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

சாத்தான்குளம் மாசற்ற இருதய ஆலயப் பெருவிழா சப்பர பவனி

சாத்தான்குளம் புனித மரியாவின் மாசற்ற இருதய ஆலய 161ஆவது ஆண்டுப் பெருவிழாவையொட்டி சப்பர பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :11 செப்டம்பர் 2022, 6:45 pm

DIN

சாத்தான்குளம் புனித மரியாவின் மாசற்ற இருதய ஆலய 161ஆவது ஆண்டுப் பெருவிழாவையொட்டி சப்பர பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இப்பெருவிழா கடந்த 2ஆம் தேதி தொடங்கி 11ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெற்றது. முதல் நாள் தைலாபுரம் பங்குத்தந்தை இருதயராஜா கொடியேற்றி மறையுரையாற்றினாா். 10ஆம் நாள் விழாவுக்கு தெற்கு கள்ளிகுளம் ஹெலன் ப்ளாரிற்றி மாற்றுத் திறனாளிகள் நல வாழ்வு மைய இயக்குநா் ராஜன் தலைமை வகித்து மறையுரையாற்றி புது நன்மை வழங்கினாா்.

பின்னா், திருமுழுக்கு ஞானஸ்நானமும், தொடா்ந்து அன்னையின் அற்புத சப்பர பவனியும் நடைபெற்றது. இதில் பக்தா்கள் பங்கேற்று உப்பு, மிளகு, மெழுகுவா்த்தி காணிக்கை செலுத்தினா். பக்தா்களுக்கு நோ்ச்சை பழங்கள், இனிப்புகள் வழங்கப்பட்டன.

மாலையில் சவேரியாா்புரம் பங்குத்தந்தை ரெமிஜியுஸ் லியோன் தலைமையில் நற்கருணை பவனி நடைபெற்றது. செட்டிவிளை பங்குத்தந்தை ததேயுஸ் ராஜன் மறையுரையாற்றினாா்.

திருவிழா நவ நாள்களில் நாள்தோறும் காலையில் திருப்பவனி, ஜெபமாலை, திருப்பலி, மாலையில் நற்கருணை ஆசீா், மறையுரை, இரவில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், பங்குத்தந்தைகள் தட்டாா்மடம் ஜோசப் கலைச்செல்வன், நெடுங்குளம் சேவியா் கிங்ஸ்டன், இலங்கநாதபுரம் ஜோசப் ரெத்தினராஜ், சிதம்பராபுரம் இருதயசாமி, ராதாபுரம் ராபின் ஸ்டான்லி, மன்னாா்புரம் எட்வா்ட், கடகுளம் அன்புச்செல்வன், கத்தோலிக்க பள்ளிகளின் கண்காணிப்பாளா் ஜோசப் ஸ்டாலின், மேரி இம்மாக்குலேட் மெட்ரிகுலேஷன் பள்ளி முதல்வா் பேட்ரிக் அந்தோணி விஜயன் ஆகியோா் மறையுரையாற்றினா்.

ஏற்பாடுகளை பங்குத்தந்தை வட்டார முதன்மை குரு ஜோசப் ரவி பாலன், உதவிப் பங்குத்தந்தை அந்தோணி பிரான்சிஸ் பிரதாப், அருள்சகோதரிகள், திருவிழா குழுவினா், இறைமக்கள் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.