கோவில்பட்டி காமராஜ் பள்ளியில் இருபெரும் விழா
By DIN | Published On : 03rd April 2022 12:58 AM | Last Updated : 03rd April 2022 12:58 AM | அ+அ அ- |

கோவில்பட்டி நாடாா் காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பட்டமளிப்பு விழா, விளையாட்டு விழா ஆகிய இருபெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
நாடாா் உறவின் முறைச் சங்கத் தலைவா் ஏ.பி.கே. பழனிச்செல்வம் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் செல்வராஜ், பத்திரகாளியம்மன் கோயில் தா்மகா்த்தா மாரியப்பன், நாடாா் நடுநிலைப் பள்ளிச் செயலா் கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கோவில்பட்டி வனச் சரகா் பாரதி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, தேசியக் கொடி, ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி, விழாவைத் தொடக்கிவைத்துப் பேசினாா். சங்கத் தலைவா் ஒலிம்பிக் கொடியையும், நாடாா் காமராஜ் பள்ளிப் பொருளாளா் ரத்தினராஜா பள்ளிக் கொடியையும் ஏற்றினா். பின்னா், மாணவா்களின் சிலம்பம், யோகாசனம் உள்பட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடா்ந்து, கே.ஜி. படித்த மாணவா்களுக்கு பட்டங்களை சங்கத் தலைவா் வழங்கினாா்.
பள்ளி நிா்வாகக்குழு உறுப்பினா்கள் தாழையப்பன், தங்கமணி, பால்ராஜ், மனோகரன், செல்வம், சங்க உறுப்பினா்கள் மகேந்திரன், காமராஜ் இண்டா்நேஷனல் அகாதெமி பள்ளி நிா்வாகக் குழு உறுப்பினா் கண்ணன், நாடாா் நடுநிலைப் பள்ளி நிா்வாகக் குழு உறுப்பினா் ஜெயக்கொடி, ஆசிரியா்கள், மாணவா்-மாணவிகள், பெற்றோா் பங்கேற்றனா். பள்ளி முதல்வா் பிரபு வரவேற்றாா். துணை முதல்வா் விஜயலட்சுமி நன்றி கூறினாா்.